ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜவுளி அமைச்சகத்தின் இந்த ஆண்டு சாதனைகள்

प्रविष्टि तिथि: 24 DEC 2025 12:44PM by PIB Chennai

மத்திய ஜவுளி அமைச்சகத்தின் 2025-ம் ஆண்டு இறுதி ஆய்வறிக்கைகொள்கைச் சீர்திருத்தங்கள், குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு முதலீடுகள் மற்றும் பண்ணை முதல் வெளிநாட்டுச் சந்தைகள் வரை முழு மதிப்புச் சங்கிலிக்கும் அதிகாரம் அளிப்பதில் உள்ள வலுவான கவனம் ஆகியவற்றால் உந்தப்பட்ட ஒரு விரிவான மற்றும் பன்முக வளர்ச்சிக் காலத்தை விவரிக்கிறது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல், உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துதல் மற்றும் கோடிக்கணக்கான விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் நலனை உறுதி செய்தல் ஆகியவற்றில் முக்கிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

கொள்கை, ஒழுங்குமுறை, கட்டமைப்பு மற்றும் வணிகம் செய்வதை எளிதாக்குவதில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விஸ்கோஸ் ஸ்டேபிள் ஃபைபர் மீதான தரக் கட்டுப்பாட்டு ஆணை  நவம்பர் 18 முதல் ரத்து செய்யப்படுகிறது.

பருத்தி மீதான சுங்க வரி விலக்கு (ஆகஸ்ட்டிசம்பர் 2025);

பருத்தி பேல்களுக்கான 2023 தரக் கட்டுப்பாட்டு ஆணை ஆகஸ்ட் 2026 வரை ஒத்திவைப்பு

பாலியஸ்டர் பிரிவுகளில் உள்ள மனிதனால் உருவாக்கப்பட்ட இழைகள்  மீதான தரக் கட்டுப்பாட்டு ஆணை  நவம்பர் 12  முதல் ரத்து செய்யப்படுகிறது.

ஜவுளி இயந்திரங்கள் மீதான தரக் கட்டுப்பாட்டு ஆணை  ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆயத்த ஆடைகள் மற்றும் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208040&reg=3&lang=1

***

TV/PKV/KR


(रिलीज़ आईडी: 2208077) आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada