சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

அலுமினியம் மற்றும் அலுமினியம் அலாய் தயாரிப்புகளில் கடைபிடிக்க வேண்டிய தர கட்டுப்பாடுகள் குறித்த கருத்தரங்கம்

प्रविष्टि तिथि: 23 DEC 2025 8:31PM by PIB Chennai

இந்திய தர நிர்ணய அமைவனத்தின்(பிஐஎஸ்) கோயம்புத்தூர் அலுவலகம் சார்பில் அலுமினியம் மற்றும் அலுமினியம் அலாய் (IS 617:2024) தயாரிப்புகளில் கடைபிடிக்க வேண்டிய தர கட்டுப்பாடுகள் குறித்த கருத்தரங்கம்இந்திய வார்ப்பட (Foundry) தொழில் கழக அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கோவையைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொறியாளர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

இந்திய தர நிர்ணய அமைவனம் கோயம்புத்தூர் அலுவலகத்தின் விஞ்ஞானி வி.ரமேஷ் இந்தக் கருத்தரங்கை வரவேற்புரையாற்றித் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து இந்திய தர நிர்ணய அமைவனத்தின் உதவி பிரிவு அதிகாரி திரு பிரசன்னா குமார் கே உரையாற்றினார். விஞ்ஞானி ஜி.வினித்குமார், IS 617:2024 தர விதி மற்றும் பரிசோதனை முறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

 

அதனைத் தொடர்ந்து விஞ்ஞானி சுரேஷ்குமார் கோபாலன்பிஐஎஸ்-ன் உரிமம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும்விஞ்ஞானி ரகு ஜோஸ்னா பிரியாஅமைவனத்தின் இணையதள சேவைகள் குறித்தும் விளக்கமளித்தனர்.

இந்தக் கருத்தரங்கில் வார்ப்பட செயல்முறைகள் மற்றும் அலுமினியம் தயாரிப்புகளில் மேற்கொள்ள வேண்டிய தர முன்னேற்றங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

***

AD/BR/SE


(रिलीज़ आईडी: 2207937) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English