சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஐஐடிஎம் பிரவர்தக் தொழில்நுட்ப அறக்கட்டளை நிறுவனம் பிரெஞ்ச் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்திய விமானப் பாதுகாப்புக் குறித்தப் பயிற்சி
प्रविष्टि तिथि:
23 DEC 2025 6:40PM by PIB Chennai
ஏர்பஸ் நிறுவனத்தின் உதவியுடன் விமான பாதுகாப்பு குறித்த கல்வியை வலுப்படுத்தும் நோக்கில் ஐஐடிஎம் பிரவர்தக் தொழில்நுட்ப அறக்கட்டளை நிறுவனம் பிரெஞ்ச் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இது குறித்த பாடத்திட்டத்தை நடத்துகிறது. இந்தப் படிப்பிற்காக அதிகரித்து வரும் தேவைகளைக் கருத்தில்கொண்டு தரமான விமானப் பாதுகாப்பு தொழில்முறை சார்ந்த நபர்களை உருவாக்கும் வகையில் நடத்தப்படும் இந்தப் பாடத்திட்டத்தில் சேர விண்ணபிப்பதற்கு 31.01.2026 கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் விமானப் பாதுகாப்புச் சேவைகளை ஊக்குவிக்கும் வகையில் ஐஐடிஎம் பிரவர்தக் தொழில்நுட்ப அறக்கட்டளை நிறுவனம், பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த இஎன்ஏசி பல்கலைக்கழகத்துடன் இணைந்து விமானப் பாதுகாப்பு மேலாண்மை குறித்தப் பயிற்சியை வழங்குகிறது. சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ள இந்தப் பல்கலைக்கழகம் ஐரோப்பிய நாடுகளில் விமானம் மற்றும் விமானப் பாதுகாப்புச் சேவைகள் குறித்த பயிற்சி வழங்குவதில் முன்னணி நிறுவனமாக உள்ளது.
இந்தப் பயிற்சியில் 30 பேர் கொண்ட இரண்டாவது தொகுதிக்கான வகுப்புகள் 2026 பிப்ரவரி மாதம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு https://digitalskills.iitmpravartak.org.in/course_details.php?courseID=402&cart= / dsa@iitmpravartak.net என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கு ஜனவரி 31-ம் தேதி கடைசி நாளாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207841®=6&lang=11
***
SS/SV/KPG/SE
(रिलीज़ आईडी: 2207879)
आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English