சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
புதுதில்லியில் உள்ள வர்தமான் மகாவீர் மருத்துவக் கல்லூரி மற்றும் சஃப்தர்ஜங் மருத்துவமனையின் 7-வது பட்டமளிப்பு விழாவில் மத்திய இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
22 DEC 2025 6:04PM by PIB Chennai
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் இன்று புதுதில்லியின் வர்தமான் மகாவீர் மருத்துவக் கல்லூரி மற்றும் சஃப்தர்ஜங் மருத்துவமனையின் 7-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். குரு கோவிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் (டாக்டர்) மகேஷ் வர்மா மற்றும் சுகாதார சேவைகள் தலைமை இயக்குநர் டாக்டர் சுனிதா சர்மா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய திருமதி படேல், பட்டம் பெற்ற மாணவர்களை வாழ்த்தி, இந்தியாவின் சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதில் அரசு மருத்துவ நிறுவனங்களின் முக்கிய பங்கை வலியுறுத்தினார். "இன்று, உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு என்ற பெரிய இலக்கை நோக்கி நகர்வதால், இந்தியா டிஜிட்டல் சுகாதாரம் மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களில் முன்னணியில் உள்ளது" என்று கூறினார். பட்டம் பெறும் மாணவர்கள் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் தீவிரமாகப் பங்களிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207479®=3&lang=1
***
SS/BR/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2207574)
வருகையாளர் எண்ணிக்கை : 77