புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
ஜிடிபி, சிபிஐ, ஐஐபி-ல் மேற்கொள்ளப்பட்ட அடிப்படை திருத்தங்கள் குறித்த வெளியீட்டிற்கு முந்தைய இரண்டாவது ஆலோசனை பயிலரங்கு
प्रविष्टि तिथि:
22 DEC 2025 2:15PM by PIB Chennai
மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), நுகர்வோர் விலை குறியீட்டு எண் (சிபிஐ), தொழில் உற்பத்தி குறியீடு ஐஐபி ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட அடிப்படை திருத்தங்கள் குறித்த வெளியீட்டிற்கு முந்தைய இரண்டாவது ஆலோசனை பயிலரங்கிற்கு மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இது புதுதில்லி பாரத் மண்டபத்தில் 2025, டிசம்பர் 23 அன்று நடைபெறவுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் ஜிடிபி, சிபிஐ மற்றும் ஐஐபி-ன் அடிப்படை திருத்தத்தில் முன்மொழியப்படும் மாதிரி மற்றும் அமைப்பு மாற்றங்களை பகிர்ந்துகொள்ளவும், அதுகுறித்து பங்கேற்பாளர்களின் கருத்துக்களை பெறுவதையும் இப்பயிலரங்கு முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் உயரதிகாரிகள், முக்கிய புள்ளி விவரங்களை பயன்படுத்துவோர், துறை சார்ந்த நிபுணர்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கித்துறை நிபுணர்கள், பிரபல பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்டோர் பயிலரங்கில் பங்கேற்கின்றனர்.
இப்பயிலரங்கின் தொடக்க அமர்வில் நித்தி ஆயோக் துணைத் தலைவர் திரு சுமன் கே பெரி முதன்மை விருந்தினராக கலந்து கொள்கிறார். அவருடன் தலைமை பொருளாதார ஆலோசகர் டாக்டர் வி அனந்த நாகேஸ்வரன், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை செயலாளர் டாக்டர் சௌரப் கார்க், தலைமை இயக்குநர் (மத்திய புள்ளியியல்) திரு என் கே சந்தோஷி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207348®=3&lang=1
***
SS/IR/RK/KR
(रिलीज़ आईडी: 2207391)
आगंतुक पटल : 9