ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மகாராஷ்டிராவில் 5,098 கி.மீ நீளமுள்ள புதிய ரயில் வழித்தடங்கள், உள்பட 38 ரயில்வே திட்டங்களுக்கு 89,780 கோடி ரூபாய் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 20 DEC 2025 2:20PM by PIB Chennai

மகாராஷ்டிராவில் 5,098 கி.மீ நீளமுள்ள புதிய ரயில் வழித்தடங்கள், அகல ரயில் பாதை மாற்றம் மற்றும் இரண்டாவது வழித்தடம் அமைத்தல் உள்ளிட்ட 38 திட்டங்களுக்கு 89,780 கோடி ரூபாய் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

2022-23-ம் ஆண்டு முதல் 2025-26-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், மகாராஷ்டிராவில், 8,603 கி.மீ நீளமுள்ள புதிய வழித்தடம், அகல ரயில் பாதையாக மாற்றுவது, இரண்டாவது வழித்தடம் அமைத்தல் ஆகிய பல்வேறு திட்டங்களுக்காக 98 ஆய்வுப் பணிகளுக்கும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், எம்யுடிபி - III மற்றும் III  போன்ற மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் 19,293 கோடி ரூபாய் செலவில், கதவுகளுடன் கூடிய 12 பெட்டிகள் கொண்ட 238 ரயில்கள் தயாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கென கடந்த ஐந்து ஆண்டுகளில், பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்காக  2009-14 - ம் ஆண்டுகளில் 1,171 கோடி ரூபாயாக இருந்த பட்ஜெட் ஒதுக்கீடு 2025-26 -ம் ஆண்டில் 23,778 கோடி ரூபாய் (20 மடங்கு கூடுதல் நிதி) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,

2009-14 ஆண்டுகளை விட 2014-25 காலகட்டங்களில், மகாராஷ்டிரா மாநிலத்தில், முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அமைக்கப்பட்ட /செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட புதிய ரயில் வழித்தடங்கள் மும்மடங்கு அதிகரித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2206929&reg=3&lang=1 

***

AD/SV/RJ


(रिलीज़ आईडी: 2206977) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी