பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய கடலோரக் காவல்படையில் , ஜிஎஸ்எல்-ன் புதிய தலைமுறை அதிவேக ரோந்துக் கப்பலான ‘அமுல்யா’ இணைப்பு

प्रविष्टि तिथि: 19 DEC 2025 4:22PM by PIB Chennai

எட்டு புதிய தலைமுறை ஆதம்யா வகுப்பு அதிவேக ரோந்துக் கப்பல்களின் வரிசையில் மூன்றாவது கப்பலான இந்திய கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான ‘அமுல்யா’ கப்பல்டிசம்பர் 19 அன்று கோவாவில் இயக்கி வைக்கப்பட்டது. கோவா ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட இந்த 51 மீட்டர் நீளமுள்ள கப்பல்உள்நாட்டு கப்பல் கட்டுமானத்தில் ஒரு புதிய மைல்கல்லைப் பிரதிபலிக்கிறது. 60%க்கும் மேற்பட்ட உள்நாட்டு உதிரிபாகங்களைக் கொண்ட, ‘விலைமதிப்பற்றது’ என்று பொருள்படும் ‘அமுல்யா’ கப்பல்அரசின் தற்சார்பு இந்தியா மற்றும் மேக்-இன்-இந்தியா முன்முயற்சிகளுக்கு இணங்கபாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தற்சார்பு நோக்கிய சீரான முன்னேற்றத்தை விளக்கிக் காட்டுகிறது. இது செயல்திறன்நீடித்த உழைப்புவிரைவான  திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் நவீன வடிவமைப்புத் தத்துவத்தை ஒருங்கிணைக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2206579&reg=3&lang=1

***

AD/PKV/SE


(रिलीज़ आईडी: 2206780) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी