சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

இந்திய தர நிர்ணய அமைவனம், கோயம்புத்தூர் கிளை, “மானக் சம்வாத்” நிகழ்ச்சியை நடத்தியது

प्रविष्टि तिथि: 19 DEC 2025 5:29PM by PIB Chennai

மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய தரநிர்ணய அமைப்பான இந்திய தரநிர்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) கோயம்புத்தூர் கிளை, “மானக் சம்வாத்எனும் தரநிலை உரையாடல் நிகழ்ச்சியை கோயம்புத்தூரில் நடத்தியுள்ளது. இந்நிகழ்ச்சியில், அண்மையில் பிஐஎஸ் உரிமம் பெற்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த 69 நிறுவனங்களின் மூத்த மேலாண்மை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் நோக்கங்களை விளக்கிப் பேசிய பிஐஎஸ் கோயம்புத்தூர் கிளை அலுவலக முதுநிலை இயக்குநர் மற்றும் தலைவர் திருமதி ஜி பவானி, தயாரிப்புத் தரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதில் பிஐஎஸ் ஆற்றும் முக்கியப் பங்கினை எடுத்துரைத்தார். உரிமம் பெற்ற நிறுவனங்கள் இந்திய தரநிலைகளுக்கு ஏற்ப இணைந்து செயல்பட வேண்டியதன்  அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து, பிஐஎஸ்  செயல்பாடுகள், இ- பிஐஎஸ்  தளம், பிஐஎஸ் கேர் செயலி, மற்றும் பிஐஎஸ்  உரிமம் செயல்படுத்தும் நடைமுறைகள்  குறித்து  கோயம்புத்தூர் கிளை அலுவலகத்தின் இயக்குநர்கள் திரு வி ரமேஷ்திரு எஸ் ரினோ ஜான், திரு ஜி வினித் குமார் ஆகியோர் விளக்கமளித்தனர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, புதிய பிஐஎஸ் உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கு உரிமத் தொகுப்பு  வழங்கப்பட்டது. இவற்றை திருமதி ஜி பவானி வழங்கினார். பின்னர் நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வில், பிஐஎஸ் சான்றிதழின் நன்மைகள், உரிமம் பெற்றவர்களின் பொறுப்புகள் குறித்து பங்கேற்பாளர்கள் தங்கள் சந்தேகங்களை முன்வைத்தனர். மேலும், பிஐஎஸ்  மேற்கொள்ளும் தர மேம்பாட்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து வழங்கப்பட்ட விளக்கவுரையை அவர்கள் பாராட்டி, தர விழிப்புணர்வை பொதுமக்களிடையே பரப்புவதற்கு தங்களது ஆதரவை வழங்க உறுதியளித்தனர்.

**

SS/SMB/KPG/EA


(रिलीज़ आईडी: 2206671) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English