பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
தேசிய அளவிலான பழங்குடியினர் மேம்பாட்டை விரைவுபடுத்த அமைச்சர் ஜுவல் ஓரம் தலைமையில் பழங்குடியின எம்பிக்கள் உறுதி
प्रविष्टि तिथि:
19 DEC 2025 1:01PM by PIB Chennai
மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு. ஜுவல் ஓரம், பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுடன் உயர்மட்ட கலந்துரையாடலை நடத்தினார். பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையில், இந்தியாவின் பழங்குடியின சமூகங்களின் முழுமையான வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட பழங்குடியினத் தலைவர்களின் கூட்டுத் தீர்மானத்தை அவர் விளக்கினார்.
ஒரு விரிவான அறிக்கையை வாசித்த திரு. ஜுவல் ஓரம், பழங்குடியின குடிமக்களை உள்ளடக்குதல், அதிகாரமளித்தல் மற்றும் கண்ணியத்துடன் நடத்துதல் ஆகியவற்றில் ஒரு பகிரப்பட்ட பொறுப்பையும் ஒருங்கிணைந்த அணுகுமுறையையும் இந்தக் கலந்துரையாடல் பிரதிபலித்தது என்று கூறினார். கொள்கை பரிந்துரைகளில் மட்டுமல்லாமல், நலத்திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதையும், கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைவதையும் உறுதி செய்வதிலும் பழங்குடியின எம்பிக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்தக் கலந்துரையாடல், மத்திய அரசின் வழிகாட்டுதலின் கீழ், நாடு முழுவதும் உள்ள பழங்குடியின சமூகங்களுக்கு உள்ளடக்கிய வளர்ச்சி, சமூக நீதி மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதற்கான பழங்குடியின எம்பிக்களின் கூட்டு முயற்சியை மீண்டும் உறுதிப்படுத்தியது.
இந்த கலந்துரையாடல், கொள்கை, அரசியல் உறுதிப்பாடு மற்றும் அடித்தட்டு மக்களின் நுண்ணறிவு ஆகியவற்றின் ஒரு சங்கமமாக அமைந்தது. இதில் பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர்கள், திட்டச் செயலாக்கத்திற்கு வழிகாட்டுவதிலும், ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதிலும், கள அளவில் பொறுப்புடைமையை உறுதி செய்வதிலும் ஒரு செயலூக்கமான பங்கை வகித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2206446®=3&lang=1
********
VT/PKV/EA
(रिलीज़ आईडी: 2206665)
आगंतुक पटल : 10