பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழகத்தைச் சேர்ந்த 2,00,841 பழங்குடியின மாணவர்களுக்கு மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் பிந்தைய கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது - மத்திய அரசு

प्रविष्टि तिथि: 18 DEC 2025 3:25PM by PIB Chennai

நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பழங்குடியின மாணவர்களுக்கு மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் பிந்தைய கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ்கடந்த 5 ஆண்டுகளில் 56 லட்சம் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய பழங்குடியின நலத்துறை இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கி தெரிவித்துள்ளார். 

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து பேசிய அவர்இது தொடர்பான விரிவான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும் தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் பயனடைந்துள்ள பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கைக் குறித்த விவரங்கள் மாவட்டம் வாரியாக வெளியிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இதன்படிதமிழ்நாட்டில் உள்ள 2,00,841 பழங்குடியின மாணவர்களுக்கு 2020-21-ம் ஆண்டிலிருந்து 2024-25-ம் ஆண்டுவரை  மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் பிந்தைய கல்வி உதவித்தொகை  வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205850&reg=3&lang=1   

*

AD/SV/KPG/SE


(रिलीज़ आईडी: 2206208) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali-TR