குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
பிரபல சிற்பி ராம் சுதர் மறைவுக்கு குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இரங்கல்
प्रविष्टि तिथि:
18 DEC 2025 4:17PM by PIB Chennai
பிரபல சிற்பி ராம் சுதர் மறைவையொட்டி குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக ஊடக வலைதளத்தில் பதிவிட்டுள்ள குடியரசு துணைத்தலைவர், உலகின் மிகப்பெரிய சிலையான ஒற்றுமை சிலை, மகாத்மா காந்தி, சத்ரபதி சிவாஜி மகராஜ் போன்ற சிறந்த தலைவர்களை கௌரவிக்கும் ஏராளமான நினைவுச்சின்னங்கள் உட்பட, இந்திய கலைக்கு சுதர் ஆற்றிய சிறந்த பங்களிப்புகள் நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தின் அழியாத முத்திரையை பதித்துள்ளதாக கூறியுள்ளார்.
மகத்தான படைப்பாற்றல், அர்ப்பணிப்பு, கலைத்திறன் ஆகியவற்றுடன் ராம் சுதர் வாழ்க்கையை வாழ்ந்தார் என்றும், தமது திறமையாலும், தொலைநோக்குப் பார்வையாலும் பல தலைமுறையினருக்கு உத்வேகம் அளித்தார் என்றும் கூறியுள்ளார். அவருடைய சிற்பங்கள் இந்தியாவின் ஆன்மா, கலாச்சாரம் மற்றும் வரலாற்றிற்கு காலத்தால் அழியாத புகழஞ்சலியாக தொடர்ந்து நிலைத்து நிற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205934®=3&lang=1
***
SS/IR/RK/SE
(रिलीज़ आईडी: 2206161)
आगंतुक पटल : 20