தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
சூரத் நகரம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் மொபைல் சேவைகளின் தரத்தை ஆய்வு செய்த டிராய்
प्रविष्टि तिथि:
18 DEC 2025 11:01AM by PIB Chennai
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), பொது தொலைத்தொடர்பு நுகர்வோரின் தகவலுக்காக, நவம்பர் மாதத்தில் குஜராத் மாநிலம் சூரத் நகரம் முழுவதும் நடத்தப்பட்ட மொபைல் சேவைகளின் சோதனை முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த சோதனையின் நோக்கம், தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களால் வழங்கப்படும் மொபைல் சேவைகளின் உலகத் தரத்தை மதிப்பிட்டுச் சரிபார்ப்பதாகும்.
இந்தச் சோதனையின் போது, டிராய் அனைத்து சேவை வழங்குநர்களின் மொபைல் நெட்வொர்க்கின் நேரலை செயல்திறன் தரவுகளை மதிப்பிட்டது. அழைப்பு இணைப்பு வெற்றி விகிதம், தரவு பதிவிறக்கம், பதிவேற்ற வேகங்கள், குரல் தரம் போன்ற முக்கிய செயல்திறன்களின் அடிப்படையில் தரவுகள் சேகரிக்கப்படுகிறது. இதில் பல மேம்பட்ட சோதனை கைபேசிகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இவை நிகழ்நேரத்தில் கண்காணிக்கப்பட்டு, மேம்பட்ட மென்பொருள் அமைப்புகளைப் பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.சோதனையின் முடிவுகளை நுகர்வோருக்குத் தெரிவிக்கவும், சேவை வழங்குநர்களைத் தங்கள் சேவைகளை மேம்படுத்த ஊக்குவிக்கவும் டிராய் இணையதளத்திலும், செய்தித்தாள்களிலும் அவை வெளியிடப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205701®=3&lang=1
***
VT/PKV/EA
(रिलीज़ आईडी: 2205744)
आगंतुक पटल : 16