அணுசக்தி அமைச்சகம்
அணுசக்தியின் உள்ளடக்கம்
प्रविष्टि तिथि:
17 DEC 2025 2:01PM by PIB Chennai
நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் அணுசக்திக்கு மிகப்பெரிய ஆற்றல் உள்ளது. நாட்டில் வரையறுக்கப்பட்ட யுரேனிய வளங்களையும், அதிக தோரியம் வளங்களையும் சரியான முறையில் பயன்படுத்தும் நோக்கில், அணுசக்தி உற்பத்தி மற்றும் நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை அடைவதற்காக, அணுசக்தித் துறை, செலவழித்த அணு எரிபொருளின் மறுசுழற்சியை அடிப்படையாகக் கொண்ட மூன்று கட்ட அணுசக்தித் திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.
தொடர்ச்சியாக செயல்படுத்தப்படவுள்ள மூன்று கட்ட அணுசக்தித் திட்டம், உலைகளில் (முதல் நிலை) இயற்கை யுரேனியத்தைப் பயன்படுத்துவதன் மூலம் உள்நாட்டில் கிடைக்கும் பிளக்கத்தகு வளங்களைப் பெருக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டத்தில், விரைவு ஈனுலைகளில் உலைகளின் செலவழித்த எரிபொருளிலிருந்து பெறப்பட்ட புளூட்டோனியம் பயன்படுத்தப்படுகிறது. நாட்டில் போதுமான அணுசக்தி நிறுவப்பட்ட திறன் கட்டமைக்கப்பட்டவுடன், விரைவு ஈனுலைகளில் பெருகும் யுரேனியம்-233 ஐப் பயன்படுத்துவதைத் தொடர்ந்து அதிக அளவிலான தோரியம் பயன்படுத்தப்படும்.
இதையடுத்து, இந்திய அணுசக்தி திட்டத்தின் மூன்றாவது கட்டத்தில், நடைமுறையில் தீர்ந்து போகாத எரிசக்தி ஆதாரமாக தோரியத்தைப் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் அடையப்படலாம். உள்நாட்டு உலைகளை உள்ளடக்கிய அணுசக்தித் திட்டத்தின் முதல் கட்டம், தொழில்துறை களத்தில் உள்ளது. இரண்டாவது கட்டத்தின் கீழ் ஒரு மாதிரி விரைவு ஈனுலை, தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் பாரதிய நபிகியா வித்யுத் நிகாம் லிமிடெட்-பாவினி (BHAVINI) மூலம் இயக்கப்படுகிறது.
அணுசக்தி என்பது 24 மணி நேரமும் கிடைக்கும் மின்சாரத்தின் சுத்தமான, அடிப்படை ஆதாரமாகும். அணுசக்தியின் சுழற்சி உமிழ்வுகள், நீர் மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளின் உமிழ்வுகளுடன் ஒப்பிடத்தக்கவை. இதனால், 2070-ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜியத்தை நோக்கிய இந்தியாவின் தூய்மையான எரிசக்தி மாற்றத்தில், அணுசக்தி குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205123®=3&lang=1
***
AD/BR/SE
(रिलीज़ आईडी: 2205658)
आगंतुक पटल : 11