மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

சைபர் பாதுகாப்பை வலுப்படுத்தும் மத்திய அரசின் முன்முயற்சிகள்

प्रविष्टि तिथि: 17 DEC 2025 12:51PM by PIB Chennai

பாதுகாப்பான, நம்பகத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் கூடிய இணையப்  பயன்பாட்டை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு கொள்கைகளை வகுத்து செயல்படுத்தி வருகிறது. இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்படும் இணையவழி அச்சுறுத்தல்கள் குறித்து போதிய விழிப்புணர்வுடனும் முழு கவனத்துடனும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

இந்திய கணினி அவசரகால பணிக் குழு மற்றும் தேசிய முக்கியத் தகவல் உள்கட்டமைப்புப் பாதுகாப்பு மையம் ஆகியவை இணைந்து முக்கியத் துறைகள் உட்பட டிஜிட்டல் சேவைகளைப் பாதுகாக்கத் தொடர் நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றன.

இந்த முகமைகள் இணையவழி செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து, உரிய தருணத்தில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, சைபர் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. அவை தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் அது சார்ந்த சட்டங்களின் கீழ்  உருவாக்கப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் பாதுகாப்பு மற்றும் பாதிப்புகள் குறித்த தணிக்கைகளை முறையாக மேற்கொள்கின்றன.

இதற்கென, ஜூலை 2025 - ல் விரிவான இணையப் பாதுகாப்புத் தணிக்கைக்கான கொள்கை வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்கி வெளியிட்டுள்ளது. முக்கிய உள்கட்டமைப்பு உட்பட அனைத்துத் துறைகளிலும் சீரான, திறன் வாய்ந்த மற்றும் பாதுகாப்பான முறையில் தணிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல், தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205047&reg=3&lang=1

-----

SS/SV/SE


(रिलीज़ आईडी: 2205489) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , हिन्दी