சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
புதுச்சேரியில் கொடிநாள் நிதி - ஜிப்மருக்கு விருது
प्रविष्टि तिथि:
17 DEC 2025 5:34PM by PIB Chennai
புதுச்சேரியில் 2024-25-ம் ஆண்டிற்கான கொடிநாள் நிதி வசூலில் அந்த யூனியன் பிரதேசத்திலேயே ஜிப்மர் மருத்துவமனை அதிக நிதி அளித்ததற்கான கோப்பையை வென்றது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முன்னாள் முப்படைவீரர் நலத்துறையின் சார்பில் ஆண்டுதோறும் முன்னாள் படைவீரர்கள், போர்களில் உயிர்நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்குவதற்காக இந்த நிதி வசூலிக்கப்படுகிறது.
2024-25-ம் ஆண்டிற்கான கொடிநாள் நிதி விருது வழங்கும் நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கே கைலாசநாதன், முதலமைச்சர் திரு என் ரங்கசாமி ஆகியோர் ஜிப்மர் மருத்துவமனைக்கு கோப்பையை வழங்கினார். இதை ஜிப்மர் சார்பாக அம்மருத்துவமனையின் மருத்து மேற்பார்வையாளர் டாக்டர் சகா வினோத்குமார் பெற்றுக்கொண்டார். புதுச்சேரி தலைமைச் செயலாளர் டாக்டர் சரத் சௌகான், ஆட்சியர் திரு எ குலோத்துங்கன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

***
SS/IR/KPG/EA
(रिलीज़ आईडी: 2205408)
आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English