உள்துறை அமைச்சகம்
பேரிடர் மேலாண்மையை வலுப்படுத்துதல்
प्रविष्टि तिथि:
16 DEC 2025 3:52PM by PIB Chennai
தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைக்கான வேதியியல், உயிரியல், கதிரியக்க, அணு மற்றும் வெடிபொருட்கள் (CBRNE), பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் பதிலளித்தல் (DRR&R) மற்றும் பேரிடர் மேலாண்மையில் உளவியல் சமூகப் பராமரிப்பு போன்ற தொடர்புடைய பாடங்களில் பயிற்சித் திட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை அதிகாரிகளுக்கு இதுபோன்ற ஐந்து சிறப்பு மற்றும் கருப்பொருள் அடிப்படையிலான படிப்புகள் நடத்தப்பட்டுள்ளன.
2022-23 முதல் 11.12.2025 வரை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகளின் சுமார் 200 அதிகாரிகளுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் பயிற்சி அளித்துள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு. நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204636®=3&lang=1
***
(Release ID: 2204636)
AD/VK/SE
(रिलीज़ आईडी: 2204941)
आगंतुक पटल : 10