கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வலுவூட்டப்பட்ட உணவு தானியங்கள் கொள்முதல் மற்றும் ஜி.எஸ்.டி. குறைப்புகள்: மத்திய அரசு தகவல்

இடுகை இடப்பட்ட நாள்: 16 DEC 2025 5:05PM by PIB Chennai

செறிவூட்டப்பட்ட அரிசி, பயறுகள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற செறிவூட்டப்பட்ட உணவு தானியங்களை நாஃபெட்  மற்றும் என்.சி.சி.எஃப். போன்ற கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படவில்லை என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் எழுத்துபூர்வமாகத் தெரிவித்தார். எனினும், நெல் மற்றும் பச்சைப்பயறுகள் அவற்றின் மூலம் கொள்முதல் செய்யப்படுகின்றன.

சமூகத்தில் நிலவும் நுண்ணூட்டச்சத்து குறைபாட்டைச் சமாளிக்க, மத்திய அரசு அரிசியை இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 உடன் வலுவூட்டும் திட்டத்தைத் தொடங்கியது. வலுவூட்டப்பட்ட அரிசியின் விநியோகம் ஜூலை 2024 முதல் டிசம்பர் 2028 வரை அனைத்து நலத்திட்டங்களிலும் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு கோரி தமிழ்நாடு அரசிடமிருந்து மனு வந்தது. இதனடிப்படையில், ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களின் கீழ், பால் மற்றும் பனீர் மீதான வரி பூஜ்யமாகவும், வெண்ணெய், நெய், சீஸ், பால் கேன்கள் மீதான ஜி.எஸ்.டி. 12% லிருந்து 5% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. விவசாயத் துறையில், உர உள்ளீடுகள், உயிரி பூச்சிக்கொல்லிகள் மற்றும் நுண்ணூட்டச் சத்துகள் மீதான ஜி.எஸ்.டி. 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்டுறவுப் பொருட்களின் போட்டித்தன்மை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204710&reg=3&lang=2

***

AD/VK/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2204936) வருகையாளர் எண்ணிக்கை : 43
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी