மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
தேசிய கால்நடை இயக்கம்-தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்: ரூ. 2672.45 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது
प्रविष्टि तिथि:
16 DEC 2025 2:59PM by PIB Chennai
கால்நடை பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீன்வளத் துறையில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்காக "தேசிய வேளாண்-தொழில்முனைவோர் திட்டத்தை" தொடங்க மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை எந்த திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை. இருப்பினும், தேசிய கால்நடை இயக்கம்-தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தை மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீன்வளத் துறை செயல்படுத்துகிறது. இது கிராமப்புற கோழி, செம்மறி ஆடுகள், ஆடுகள், பன்றிகள், ஒட்டகங்கள், குதிரைகள் மற்றும் கழுதை பண்ணைகளுக்கு 50% மூலதன மானியம் வழங்குகிறது.
தற்போது வரை, 3843 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான மொத்த திட்ட செலவு ரூ. 2672.45 கோடி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மானியம் ரூ. 1233.69 கோடி. தேசிய கால்நடை இயக்கம்-தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தொழில்முனைவோர் சமர்ப்பிக்கும் திட்டங்களை செயலாக்குதல், சரிபார்த்தல் மற்றும் தொடர்ந்து சமர்ப்பித்தல் ஆகியவற்றிற்கு மாநில அரசுகள் செயல்படுத்தும் நிறுவனங்களாக உள்ளன. இப்போது வரை, 3784 தனிப்பட்ட பயனாளிகளுக்கு உதவி செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் இத்தகவலைத் தெரிவித்தார்.
***
AD/SMB/SE
(रिलीज़ आईडी: 2204919)
आगंतुक पटल : 14