அணுசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவை மாற்றுவதற்காக அணுசக்தியின் நிலையான பயன்பாடு மற்றும் மேம்பாட்டு மசோதா, 2025-ஐ டாக்டர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்

प्रविष्टि तिथि: 15 DEC 2025 6:09PM by PIB Chennai

அணுசக்தியை நிர்வகிக்கும் இந்தியாவின் சட்ட கட்டமைப்பைப் புதுப்பிப்பதற்கான ஒரு முக்கிய முயற்சியைக் குறிக்கும் வகையில், இந்தியாவை மாற்றுவதற்காக அணுசக்தியின் நிலையான பயன்பாடு மற்றும் மேம்பாட்டு மசோதா, 2025-ஐ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். முன்மொழியப்பட்ட மசோதா, 1962-ம் ஆண்டு அணுசக்தி சட்டம் மற்றும் 2010-ம் ஆண்டு அணுசக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்புச் சட்டம் ஆகியவற்றை ரத்து செய்து, அவற்றை இந்தியாவின் தற்போதைய மற்றும் எதிர்கால எரிசக்தித் தேவைகளுக்கு ஏற்ப, விரிவான ஒரு சட்டத்தால் மாற்ற முயல்கிறது.

முன்மொழியப்பட்ட மசோதா, இந்தியாவின் நீண்டகால எரிசக்தி மற்றும் காலநிலை இலக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை 2070-ம் ஆண்டுக்குள் கார்பன் நீக்கத்திற்கான நாட்டின் செயல்திட்டத்தையும், 2047-ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி திறனை அடைவதற்கான இலக்கையும் கோடிட்டுக் காட்டுகிறது. இந்த நோக்கங்களை நிறைவேற்ற, உள்நாட்டு அணுசக்தி வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி, பொது மற்றும் தனியார் துறைகளின் தீவிர பங்கேற்பை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை மசோதா வலியுறுத்துகிறது.

அணுசக்தி உற்பத்தி அல்லது பயன்பாட்டில் ஈடுபட்டுள்ள குறிப்பிட்ட நபர்களுக்கு உரிமம் மற்றும் பாதுகாப்பு அங்கீகாரத்திற்கான விதிகளை மசோதா வகுப்பதுடன், இடைநிறுத்தம் அல்லது ரத்து செய்வதற்கான தெளிவான காரணங்களையும் வழங்குகிறது. சுகாதாரம், உணவு மற்றும் விவசாயம், தொழில் மற்றும் ஆராய்ச்சி போன்ற துறைகளில் அணு மற்றும் கதிர்வீச்சு தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்த முயல்கிறது, அதே நேரத்தில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதுமை நடவடிக்கைகளுக்கு உரிமத் தேவைகளிலிருந்து விலக்கு அளிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204236&reg=3&lang=1

***

(Release ID: 2204236)

SS/BR/KR


(रिलीज़ आईडी: 2204412) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी