நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கல்விக்கடன்களில் வாராக்கடன் 7 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக சரிவு: வித்யாலட்சுமி திட்டம் அமல்

प्रविष्टि तिथि: 15 DEC 2025 6:58PM by PIB Chennai

பொதுத்துறை வங்கிகள்  வழங்கிய நிலுவையில் உள்ள கல்விக்கடன்களின் மொத்த வாராக்கடன்  விகிதம், 2020-21 நிதியாண்டில் 7% ஆக இருந்தது. இது, 2024-25 நிதியாண்டில் 2% ஆகக் குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி  தெரிவித்துள்ளது. இது வங்கிகளின் கடன் சொத்துத் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டுகிறது.

திருத்தப்பட்ட மாதிரி கல்விக்கடன் திட்டத்தின்படி, ரூ.7.50 லட்சம் வரையிலான கடன்களுக்குப் பிணையப் பாதுகாப்பு தேவையில்லை. மேலும், தகுதியுடைய விண்ணப்பங்களுக்கு ரூ.7.50 லட்சத்திற்கும் அதிகமாகவும் பிணையில்லா கடன்களை வங்கிகள் வழங்குகின்றன.

பிரதம மந்திரி வித்யாலட்சுமி திட்டம் 2024-ல் தொடங்கப்பட்டது. இத்திட்டம், தரமான உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு எளிய, வெளிப்படையான முறையில் பிணையில்லா, உத்தரவாதமில்லாக் கல்விக்கடன்களை உறுதி செய்கிறது. வாராக்கடன்களைத் தீர்க்க வங்கிகளுக்கு வழிகாட்டுதல்களையும் இந்திய ரிசர்வு வங்கி  வழங்கியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204268&reg=3&lang=2

(வெளியீட்டுஅடையாள எண்: 2204268)

****

SS/VK/SH


(रिलीज़ आईडी: 2204372) आगंतुक पटल : 51
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी