பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் தொழில் புரிவதை எளிமையாக்க அரசு எடுத்த முக்கிய நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 15 DEC 2025 5:53PM by PIB Chennai

2014-ம் ஆண்டு முதல், இந்தியாவில் தொழில் புரிவதை எளிமையாக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

மக்கள் நம்பிக்கை சட்டம், 2023 மூலம் 42 மத்தியச் சட்டங்களில் உள்ள 183 விதிகள் குற்றமற்றதாக்கப்பட்டுள்ளன . அத்துடன், 47,000 இணக்க விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.

நிறுவனங்களைப் பதிவு செய்வதை விரைவுபடுத்த மத்தியப் பதிவு மையம்  நிறுவப்பட்டது. மேலும், ஸ்பைஸ்+ போன்ற ஒரே ஒருங்கிணைந்த படிவங்கள் மூலம் பான், ஜிஎஸ்டி மற்றும் வங்கிக் கணக்கு தொடங்குதல் போன்ற சேவைகளை ஒரே நேரத்தில் பெற வழிவகை செய்யப்பட்டது. நிறுவனங்களை மூடுவதை எளிதாக்க சி-பேஸ் மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தச் சீர்திருத்தங்களால், செயல்பாட்டில் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 2014-ல் இருந்ததைவிட இரு மடங்காகி, 2025-ல் 18.5 லட்சமாக உயர்ந்துள்ளது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204206&reg=3&lang=1

(வெளியீட்டுஅடையாள எண்: 2204206)

****

SS/VK/SH


(रिलीज़ आईडी: 2204361) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी