ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆறுகளை இணைக்கும் பணியில் முன்னேற்றம்

प्रविष्टि तिथि: 15 DEC 2025 4:08PM by PIB Chennai

தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம், ஆறுகளை இணைக்கும்  30 திட்டங்களுக்கான முன்-சாத்தியக்கூறு அறிக்கைகள், 26 இணைப்புகளுக்கான சாத்தியக்கூறு அறிக்கைகள்,  13 இணைப்புகளுக்கான விரிவான திட்ட அறிக்கைகள்  ஆகியவற்றை நிறைவு செய்துள்ளது.

ஐந்து இணைப்புகள் முன்னுரிமைத் திட்டங்களாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

1. கென்–பெட்வா இணைப்புத் திட்டம்

2. மாற்றியமைக்கப்பட்ட பர்பதி–காளிசிந்த்–சம்பல்  இணைப்புத் திட்டம்

கோதாவரி–காவிரி இணைப்புத் திட்டம், மூன்று துணை இணைப்புகளை உள்ளடக்கியது:

3. கோதாவரி (இஞ்சம்பள்ளி) – கிருஷ்ணா (நாகார்ஜுனசாகர்)

4. கிருஷ்ணா (நாகார்ஜுனசாகர்) – பென்னார் (சோமாசிலா)

5. பென்னார் (சோமாசிலா) – காவிரி (பெரிய அணைக்கட்டு)

கோதாவரி–காவிரி இணைப்புத் திட்டம்:

இந்த இணைப்புத் திட்டத்தின் கீழ் மூன்று இணைப்புத் திட்டங்களின் விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு,  மாநிலங்களுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களுக்குப் பிறகு, கோதாவரியில் இருந்து சுமார் 4189 மில்லியன் கன மீட்டர் தண்ணீரை பெட்டி-வர்தா இணைப்பு மூலம் கிருஷ்ணா படுகையில் கூடுதல் நீர் வழங்கலுக்கான திட்டத்தை இடைக்கால ஏற்பாடாக உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறு அறிக்கை, வரைவு அறிக்கை ஆகியவை  தயாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மத்திய ஜல் சக்தி துறை  இணையமைச்சர் திரு ராஜ் பூஷண் சவுத்ரி இன்று மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலை வழங்கினார்.

மேலும் முழுமையான விவரங்களுக்கு இந்த ஆங்கிலச்செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204097&reg=3&lang=1

Release ID: 2204097

****

SS/PKV/SH


(रिलीज़ आईडी: 2204311) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Telugu