ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடமிருந்து நிதிசார் முறைகேடுகள் மற்றும் தரமற்ற பணிகளுக்கான இழப்பீடு மற்றும் அபராதம் விதிப்பது குறித்த அறிக்கை

प्रविष्टि तिथि: 15 DEC 2025 4:15PM by PIB Chennai

ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் மிகவும் குறைந்த தரத்திலான பணிகள் மற்றும் நிர்வாக முறைகேடுகள் தொடர்பாக, அபராதம் மற்றும் தொகைகளை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 32 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 6 மாநிலங்கள் (தமிழ்நாடு, திரிபுரா, குஜராத், அசாம், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான்) ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.

கூடுதலாக உத்திரப்பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகிய 2 மாநிலங்களைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்களிடம் இருந்து இழப்பீடுகளுக்கான தொகையை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் குறித்த விவரங்களும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

இவை தவிர, கர்நாடகா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் தரம் குறைந்த பணிகளுக்கு மாநிலங்களின் நிரந்தர வைப்புத்தொகையை விலக்கிக் கொள்வதற்கான நடவடிக்கைகள் இதில் இடம்பெற்றுள்ளன.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு வி சோமண்ணா இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204109&reg=3&lang=1

***

SS/SV/LDN/SH


(रिलीज़ आईडी: 2204305) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी