கலாசாரத்துறை அமைச்சகம்
தொல்லியல் அருங்காட்சியகங்கள் மேம்பாட்டிற்கு அரசு உதவுகிறது- மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்
प्रविष्टि तिथि:
15 DEC 2025 4:11PM by PIB Chennai
நாட்டில் இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் கீழ் 52 தொல்லியல் அருங்காட்சியகங்கள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த கேள்விக்கு மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், மத்திய அரசு ஆண்டுதோறும் ஒதுக்கும் நிதியின்படி, இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம், தொல்லியல் அருங்காட்சியகங்களை காலமுறையில் மேம்படுத்தி பராமரிப்பதாக தெரிவித்தார். மேலும், மத்திய மாநில அரசுகள், சங்கங்கள், தன்னாட்சி அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளைகள் நடத்தும் அருங்காட்சியகங்களின் பணியாளர்களுக்கு பயிற்சி, அருங்காட்சியகங்கள மின்னணு மயமாக்குதல் அதன் மேம்பாடு, புதிய அருங்காட்சியகங்களை அமைத்தல் ஆகியவற்றுக்கு அருங்காட்சியக மானியத் திட்டத்தின் கீழ், கலாச்சார அமைச்சகம் நிதியுதவி அளிப்பதாக திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204101®=3&lang=1
***
SS/IR/KPG/SH
(रिलीज़ आईडी: 2204304)
आगंतुक पटल : 44