எரிசக்தி அமைச்சகம்
எரிசக்தி பாதுகாப்பு என்பது விருப்பமல்ல, அது அவசியம்: குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு
பசுமை எரிசக்தியை நோக்கிய மாற்றத்திற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது - மத்திய அமைச்சர் திரு மனோகர் லால்
प्रविष्टि तिथि:
14 DEC 2025 3:55PM by PIB Chennai
தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம் இன்று (14.12.2025) புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் கொண்டாடப்பட்டது. இதில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்று, தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகளையும் எரிசக்தி பாதுகாப்பு குறித்த தேசிய ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கிப் பாராட்டினார். இந்த நிகழ்வை மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள எரிசக்தி திறன் அமைப்பான பிஇஇ ஏற்பாடு செய்தது.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், எரிசக்தி சேமிப்பு என்பது மிகவும் தேவை என்று கூறினார். எரிசக்தியை சேமிப்பது என்பது எரிசக்தியை உற்பத்தி செய்வதற்கு சமம் என்று அவர் தெரிவித்தார். இந்தியாவின் அதிகரித்து வரும் எரிசக்தி தேவைகள் நிலையான, பொறுப்பான முறைகளில் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். எரிசக்திப் பாதுகாப்பு என்பது விருப்பமல்ல எனவும் அது அவசியம் என்றும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய மின்த்துறை அமைச்சர் திரு மனோகர் லால், சிறந்த எரிசக்தி திறன் கொண்ட வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று என்று குறிப்பிட்டார்.
இந்தியா தனது எரிசக்தி மாற்றப் பயணத்தில் ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது என்று திரு மனோகர் லால் கூறினார். பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்தியா எட்டியுள்ளது என்று அவர் தெரிவித்தார். பசுமை எரிசக்தியை நோக்கிய மாற்றத்திற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
மின்துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக் தமது உரையில், தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகள், எரிசக்தி பாதுகாப்பில் சிறந்த முயற்சிகளை அங்கீகரிக்கும் ஒரு சிறந்த மரபை உருவாக்கியுள்ளது என்று குறிப்பிட்டார். எரிசக்தி சேமிப்பு என்பது தொழில்நுட்ப விஷயம் மட்டுமல்ல எனவும் அது செயல்பாடுகளில் மாற்றத்தைப் பற்றியதும் ஆகும் என்றும் அவர் கூறினார்.
விருதுகள் பற்றி:
எரிசக்தி திறன் அமைப்பான பிஇஇ, தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, எரிசக்தி நுகர்வைக் குறைப்பதில் தொழில்துறை நிறுவனங்களின் முயற்சிகளை அங்கீகரித்து ஊக்குவிக்கிறது. தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகளுக்கான விண்ணப்பங்கள் விளம்பரம் மூலம் வரவேற்கப்பட்டது. பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 558 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த ஆண்டு விருதுகளில் 25 முதல் பரிசுகள், 5 இரண்டாம் பரிசுகள், 26 தகுதிச் சான்றிதழ்கள், புதுமை விருதுகளுக்கான 3 அங்கீகாரச் சான்றிதழ்கள் ஆகியவை அடங்கும்.
எரிசக்தி சேமிப்பு குறித்த தேசிய ஓவியப் போட்டி 2025:
தேசிய அளவில் மூன்று நிலைகளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போட்டியில் நாடு முழுவதிலுமிருந்து 80 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2203713®=3&lang=1
***
SS/PLM/RJ
(रिलीज़ आईडी: 2203786)
आगंतुक पटल : 17