மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
லட்சத்தீவில் முதலீட்டு வாய்ப்புகள் - மீன்வளத்துறை சார்பில் முதலீட்டாளர் கூட்டம் நடைபெற்றது
प्रविष्टि तिथि:
14 DEC 2025 1:47PM by PIB Chennai
லட்சத்தீவு யூனியன் பிரதேசமான பங்காரம் தீவுகளில், மீன்வளத் திறனை வெளிப்படுத்துவதற்காக, டிசம்பர் 13 , 2025 அன்று முதல் முதலீட்டாளர்கள் கூட்டத்தை மீன்வளத் துறை ஏற்பாடு செய்தது. இதில் மத்திய மீன்வளத் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங், துறையின் இணை அமைச்சர்கள் பேராசிரியர் எஸ்.பி. சிங் பாகேல், திரு ஜார்ஜ் குரியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது மீன்வளத் துறை சார்பில் இந்த யூனியன் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட முதல் முதலீட்டாளர்கள் சந்திப்பாகும். இதில் நாடு முழுவதிலுமிருந்து ஆழ்கடல் மீன்பிடித்தல், கடற்பாசி வளர்ப்பு, அலங்கார மீன்கள் போன்ற துறைகளில் தொழில் புரியும் முதலீட்டாளர்களும் தொழில்முனைவோரும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தின் போது, மீன்வளம், மீன்வளர்ப்புத் துறையில் முதலீட்டு வாய்ப்புகளுக்கான கீழ்க்கண்ட 4 முக்கிய பகுதிகளை மத்திய அரசின் மீன்வளத் துறை எடுத்துரைத்தது.
* ஆழ்கடல் மீன்பிடி வாய்ப்புகள்
* கடற்பாசி: கடலோர வேளாண்மை, உயிரி பதப்படுத்துதல், உயிரி பொருட்கள்
* அலங்கார மீன்கள்: குஞ்சு பொரிக்கும் நிலையங்கள், குஞ்சு பொரிக்கும் வங்கிகள், ஒருங்கிணைந்த நிறுவனப் பிரிவுகள்.
* கடல்சார் கூண்டு வளர்ப்பு நடைமுறைகள்
முதலீட்டை எளிதாக்கவும், செயல்முறைகளை நெறிப்படுத்தவும், லட்சத்தீவில் திட்ட ஒப்புதல்களை சீராக வழங்க ஒற்றைச் சாளர அமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த முதலீட்டாளர்கள் சந்திப்பு ஏற்கனவே வலுவான ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. இங்கு 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டு திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இது லட்சத்தீவில் நிலையான வளர்ச்சியை உறுதி செய்யும்.
மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2203682®=3&lang=1
***
SS/PLM/RJ
(रिलीज़ आईडी: 2203745)
आगंतुक पटल : 14