ஜவுளித்துறை அமைச்சகம்
இந்தியாவின் வளமான கைவினை மரபுகளை எடுத்துக்காட்டும் 'எதிர்காலத்திற்காக வடிவமைக்கப்பட்டது' என்ற கண்காட்சியை மத்திய அமைச்சர் திரு கிரிராஜ் சிங் தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
13 DEC 2025 6:12PM by PIB Chennai
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் புதுதில்லியில் உள்ள தேசிய கைவினை அருங்காட்சியகத்தில் "எதிர்காலத்திற்காக வடிவமைக்கப்பட்டது" என்ற கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். இந்தியாவின் வளமான கைவினை மரபுகளையும், நிலையான, சமகால வாழ்க்கைக்கு அவற்றின் பொருத்தத்தையும் இந்தக் கண்காட்சி எடுத்துக்காட்டுகிறது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு கிரிராஜ் சிங், இன்றைய இளைஞர்கள் பாரம்பரிய கைவினைப் பொருட்களைப் பற்றி அறிந்து கொண்டு, உலகளாவிய பார்வையாளர்களுக்கு ஏற்ற சமகால தயாரிப்புகளை உருவாக்குகிறார்கள் என்று கூறினார். கைவினைஞர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தருவதற்கும், இந்தியாவிலிருந்து கைவினைப் பொருட்களை பல்வேறு நாடுகளுக்கு எடுத்துச் செல்வதற்கும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக திரு கிரிராஜ் சிங் கூறினார். தேசிய கைவினைப் பொருட்கள் வாரத்தின் ஒரு பகுதியாக டிசம்பர் 21, 2025 வரை இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2203539®=3&lang=1
***
SS/RB/RJ
(रिलीज़ आईडी: 2203660)
आगंतुक पटल : 7