கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
ராஜஸ்தானில் உள்நாட்டு துறைமுக வசதி
இடுகை இடப்பட்ட நாள்:
13 DEC 2025 5:48PM by PIB Chennai
தீன்தயாள் துறைமுக ஆணையம் ஏற்றுமதித் துறைக்கு மலிவான போக்குவரத்து வசதிகளில் ஒன்றை அளிக்கிறது. இது நாட்டின் அனைத்து முக்கிய துறைமுகங்களிலும் மிகக் குறைந்த சரக்கு மற்றும் கப்பல் தொடர்பான கட்டணங்களை வழங்குகிறது. உள்நாட்டு துறைமுக வசதிகள் ஏற்கனவே ராஜஸ்தானில் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தால் அறிவிக்கப்பட்ட 12 உள்நாட்டு கொள்கலன் கிடங்குகள் மூலம் கிடைக்கின்றன. அவை ஏற்றுமதி-இறக்குமதி சரக்குகளின் இயக்கத்தை ஆதரிக்கின்றன. இந்த உள்நாட்டு கொள்கலன் கிடங்குகளை வர்த்தகத்திற்காக சுங்க அனுமதி மற்றும் தொடர்புடைய தளவாட சேவைகளுக்குப் பயன்படுத்தலாம்.
இந்தத் தகவலை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2203530®=3&lang=1
****
(Release ID: 2203530)
SS/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2203656)
வருகையாளர் எண்ணிக்கை : 27