கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
நாட்டில் 111 நீர்வழிகள் தேசிய நீர்வழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன - 32 நீர்வழிகள் செயல்பாட்டில் உள்ளன: மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால்
प्रविष्टि तिथि:
13 DEC 2025 5:46PM by PIB Chennai
தேசிய நீர்வழிச் சட்டம், 2016-ன் படி, 111 நீர்வழிகளை தேசிய நீர்வழிகளாக அரசு அறிவித்துள்ளது. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பான இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையம், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முன்மொழிவின் அடிப்படையில் சாத்தியமான நீர் வழிகளின் தொழில்நுட்ப-பொருளாதார சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்கிறது.
அந்த அறிக்கையின் படி சரக்கு/பயணிகள் போக்குவரத்திற்காக இந்த தேசிய நீர்வழிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது, சரக்கு/பயணிகள் இயக்கத்திற்காக 32 தேசிய நீர்வழிகள் செயல்பாட்டில் உள்ளன.
இந்தத் தகவலை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2203529®=3&lang=1
***
(Release ID)
SS/PLM/RJ
(रिलीज़ आईडी: 2203618)
आगंतुक पटल : 14