பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய ராணுவ அகாடமியில் 157-வது பயிற்சி நிறைவு அணிவகுப்பை ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர திவேதி பார்வையிட்டார்
प्रविष्टि तिथि:
13 DEC 2025 6:23PM by PIB Chennai
டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமி, வரலாற்று சிறப்புமிக்க பயிற்சி சதுக்கத்தில் இன்று நடைபெற்ற 157-வது பயிற்சி நிறைவு அணிவகுப்பை ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர திவேதி பார்வையிட்டார்.
ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, அணிவகுப்பை பார்வையிட்டு, புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளை வெற்றிகரமாக பயிற்சி முடித்ததற்காக வாழ்த்தினார். இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், இந்த பணி உறுதியான அர்ப்பணிப்பு, தன்னலமற்ற சேவை மற்றும் தேவைப்படும்போது, நாட்டிற்கான சேவையில் இறுதி தியாகத்தை கோரும் ஒரு உன்னதமான அழைப்பு என்று தெரிவித்தார். தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்கள் மற்றும் துணிச்சலான அதிகாரிகளை உருவாக்கும் இந்திய ராணுவ அகாடமியின் புகழ்பெற்ற மரபை அவர் பாராட்டினார்,
இந்த நிகழ்வில், பயிற்சி முடித்த வீரர்களின் பெற்றோர், குடும்ப உறுப்பினர்கள், மூத்த ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2203550®=3&lang=1
***
SS/PKV/RJ
(रिलीज़ आईडी: 2203610)
आगंतुक पटल : 8