அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

ஆர்டிஐ நிதியத்தின் வெளிக்கள நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள், தொழில்முனைவோருடன் டாக்டர் ஜிதேந்திர சிங் கலந்துரையாடல்

प्रविष्टि तिथि: 13 DEC 2025 4:51PM by PIB Chennai

புதுதில்லியில் நடைபெற்ற ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க ( ஆர்டிஐநிதியத்தின்  வெளிக்கள நிகழ்ச்சியில்  மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (தனிப்பொறுப்புஇணையமைச்சர்  டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், இது, தனியார் துறை கண்டுபிடிப்புகளை நிதி ரீதியாக செயல்படுத்த அரசு மேற்கொள்ளும் ஒரு முயற்சியாகும் என்று கூறினார். ரூ 1 லட்சம் கோடி ஆர்டிஐ நிதியம்  இந்திய தொழில்துறையில் முன்னெப்போதும் இல்லாத நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

இது தொண்டு அல்லது கருணை அல்ல, இது தனியார் துறையை ஆதரிப்பதற்கும், ஆழமான தொழில்நுட்பத்தில் இந்தியாவின் கூட்டு வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும் ஒரு ஊக்கியாகும் என்று அமைச்சர் கூறினார்.

தனியார் தொழில் லட்சியமிக்க ஆராய்ச்சியை மேற்கொள்ளவும், உலகளவில் போட்டித்தன்மையுடன் வெளிப்படவும் தயாராக இருப்பதை உறுதி செய்யும் உத்தியை இந்தியா கடைப்பிடித்து வருகிறது என்று அவர் கூறினார்.

டாக்டர் ஜிதேந்திர சிங் ஆர்டிஐ  நிதியத்தின் நிதிக் கட்டமைப்பின் தனித்துவத்தை விளக்கினார். நிதியம் எந்தவொரு பிணையமும் அல்லது உத்தரவாதங்களும் இல்லாமல், 3 சதவீதத்திற்கும் குறைவான குறைந்தபட்ச வட்டி விகிதத்துடன் பிணையமற்ற கடன்களை வழங்குகிறது, இது சர்வதேச அளவில் ஒரு அரிய முன்னுதாரணமாகும் என்பதை அவர் எடுத்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2203501&reg=3&lang=1  

***

SS/PKV/RJ


(रिलीज़ आईडी: 2203574) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी