பாதுகாப்பு அமைச்சகம்
ஹைதராபாத் விமானப்படை அகாடமியில் ஒருங்கிணைந்த பயிற்சி நிறைவு அணிவகுப்பு
प्रविष्टि तिथि:
13 DEC 2025 4:27PM by PIB Chennai
ஹைதராபாதின் டுண்டிகலில் உள்ள விமானப்படை அகாடமியில் ஒருங்கிணைந்த பயிற்சி நிறைவு அணிவகுப்பு இன்று (டிசம்பர் 13, 2025) நடைபெற்றது. இது இந்திய விமானப்படையின் பறக்கும் பிரிவு, தரைப்படைப் பிரிவு ஆகியவற்றில் பயிற்சி பெற்றவர்களின் பயிற்சி நிறைவைக் குறிக்கும் அணிவகுப்பாகும். முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகான் அணிவகுப்பின் ஆய்வு அதிகாரியாக இதில் பங்கேற்றார். பயிற்சியை நிறைவு செய்த 29 பெண்கள் உட்பட மொத்தம் 244 விமான படையினருக்கு அவர் பட்டச் சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய ஜெனரல் அனில் சௌகான், புதிதாக பொறுப்பேற்கும் அதிகாரிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். கொள்கை சார்ந்த விஷயங்களில் உறுதியுடன் இருக்குமாறு அவர் அதிகாரிகளை வலியுறுத்தினார். நவீன தொழில்நுட்பங்களை தொடர்ந்து அறிந்து கொண்டு அதன் அடிப்படையில் கள செயல்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். விமானப் படைத் தலைமைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ பி சிங் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2203490®=3&lang=1
***
SS/PLM/RJ
(रिलीज़ आईडी: 2203552)
आगंतुक पटल : 19