கனரகத் தொழில்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் இ-டிரைவ் திட்டத்தின் கீழ் மின்சார வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பு

प्रविष्टि तिथि: 05 DEC 2025 4:35PM by PIB Chennai

பிரதமரின் இ-டிரைவ் திட்டத்தின் கீழ் மின்சார வாகன பொது சார்ஜிங் நிலையங்களுக்கு  மானிய நிதியைப் பெறவும் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்கவும் தகுதியுள்ள நிறுவனங்கள், மத்திய அரசின் அமைச்சகங்கள், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், அமைச்சகங்களின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்புகள், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் அவற்றின் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகும். இந்த நிறுவனங்கள் தேவையை ஒருங்கிணைக்கவும் செயல்படுத்தலை மேற்பார்வையிடவும் நோடல் நிறுவனங்களை நியமிக்கின்றன.

இத்திட்டத்தின் மொத்த செலவு ரூ 10,900 கோடி ஆகும், இதில் ரூ 2,000 கோடி பொது மின்சார வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பை (பேட்டரி மாற்றும் நிலையங்கள் மற்றும் பேட்டரி சார்ஜிங் நிலையங்கள்)  அமைப்பதற்காக குறிப்பாக ஒதுக்கப்பட்டது.

இந்தத் தகவலை கனரக தொழில்துறை இணையமைச்சர் திரு பூபதிராஜு ஸ்ரீனிவாச வர்மா இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2199445&reg=3&lang=1

 

 

SS/PKV/SH


(रिलीज़ आईडी: 2203311) आगंतुक पटल : 56
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी