ஜவுளித்துறை அமைச்சகம்
ஜவுளி ஏற்றுமதிக்கான நடவடிக்கைகள் உத்வேகம் பெற்றுள்ளது
प्रविष्टि तिथि:
12 DEC 2025 1:52PM by PIB Chennai
நாட்டின் ஜவுளி மற்றும் கைவினைப் பொருட்களின் ஏற்றுமதியை மத்திய ஜவுளி அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்தியாவின் ஜவுளி மற்றும் கைவினைப் பொருட்களின் ஏற்றுமதி 2024-25-ம் நிதியாண்டில் 37,755 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது முந்தைய (2023-24 நிதியாண்டு) ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.2 சதவீதம் அதிகமாகும். ஏப்ரல் முதல் அக்டோபர் 2025 வரையிலான காலகட்டத்தில் ஜவுளி மற்றும் கைவினைப்பொருட்களின் ஏற்றுமதி 20,401.95 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 1.8 சதவீதம் குறைவாகும். சர்வதேச அளவில் ஏற்றுமதிக்கான வரிகள் மற்றும் பல்வேறு சவாலான சூழல்கள் ஒட்டுமொத்த ஏற்றுமதிக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான கால கட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு செய்யப்படும் ஏற்றுமதி நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, சீனா, சவுதி அரேபியா, எகிப்து மற்றும் ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதிக்கான சந்தை வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு பிரதமரின் மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆயத்த ஆடைகள் பூங்கா என்ற முன்னோடி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் விருதுநகர் உட்பட நாடு முழுவதும் 7 இடங்களில் இந்த ஜவுளி பூங்காக்களை மத்திய அரசு அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2202865®=3&lang=1
***
SS/SV/KPG/SH
(रिलीज़ आईडी: 2203277)
आगंतुक पटल : 8