தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
அஞ்சல் துறை வருவாய் இழப்பைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை: மத்திய அரசு தகவல்
प्रविष्टि तिथि:
10 DEC 2025 4:53PM by PIB Chennai
அஞ்சல் துறை, போலி முத்திரைகள், முத்திரைக் கட்டணக் குறைபாடுகள் மற்றும் நிபந்தனை மீறல்கள் மூலம் ஏற்படும் வருவாய் இழப்பைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அடையாளம் காணப்பட்ட மோசடி முறைகளை ஆய்வு செய்து, அவற்றைத் தடுக்க புதிய செயல்முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அஞ்சல் நிலையங்கள் அவற்றின் பரிவர்த்தனையின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தொழில்நுட்பம் மற்றும் தரவுப் பகுப்பாய்வு மூலம் ஆபத்து மேலாண்மை அமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திர சேகர், இன்று மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201563®=3&lang=1
செய்தி வெளியீட்டு அடையாள எண்: 2201563
****
AD/VK/SH
(रिलीज़ आईडी: 2202641)
आगंतुक पटल : 10