சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சட்டத் துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு

प्रविष्टि तिथि: 11 DEC 2025 1:28PM by PIB Chennai

இந்திய உச்ச நீதிமன்றத்தின் இ-குழு வழங்கிய தகவலின்படி, இ-நீதிமன்றங்களின் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இ -நீதிமன்ற மென்பொருள் பயன்பாடுகளில், செயற்கை நுண்ணறிவு மற்றும் அதன் துணைப் பிரிவுகளான எந்திரக் கற்றல், ஆப்டிகல் எழுத்து அங்கீகாரம், இயற்கை மொழி செயலாக்கம்  போன்ற அண்மைக்கால தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மொழிபெயர்ப்பு, நிர்வாக செயல்திறனை மேம்படுத்துதல், தானியங்கி மனு தாக்கல், திட்டமிடல், வழக்கு தகவல் அமைப்பை மேம்படுத்துதல், சாட்பாட்கள் மூலம் வழக்குரைஞர்களுடன் தொடர்புகொள்வது போன்ற துறைகளில் செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைக்கப்படுகிறது.

சென்னை ஐஐடி ஒருங்கிணைப்புடன், குறைபாடுகளை அடையாளம் காண மின்னணு தாக்கல் மென்பொருளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திரக் கற்றல் அடிப்படையிலான கருவிகளை உருவாக்கி உச்ச நீதிமன்றம் பயன்படுத்தியுள்ளது. மேலும் சில மின்னணு சாதனங்களையும் பரிசோதித்து வருகிறது.

நீதித்துறையில் செயற்கை நுண்ணறிவு  பயன்பாட்டை ஆராய, உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்தது, இது இந்திய நீதித்துறையில் செயற்கை நுண்ணறிவு பற்றி கருத்துருவாக்குதல், செயல்படுத்துதல், கண்காணித்தல் ஆகியவற்றிற்கு பொறுப்பாகும். 2023-24 முதல் 4 ஆண்டுகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட இ-நீதிமன்றங்கள் திட்டத்தின் கட்டம்-IIIன் கீழ், எதிர்கால தொழில்நுட்ப முன்னேற்றத்திற்காக ரூ.53.57 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் இன்று மாநிலங்களவையில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2202159&reg=3&lang=1

****

AD/SMB/SH


(रिलीज़ आईडी: 2202607) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी