உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
பிஎம்கேஎஸ்ஒய் திட்டத்தின் கீழ் பெரிய உணவு பூங்கா திட்டங்கள்
प्रविष्टि तिथि:
11 DEC 2025 3:53PM by PIB Chennai
உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம், பிரதமரின் வேளாண் மேம்பாட்டுத் திட்டம் எனப்படும் பிஎம்கேஎஸ்ஒய் (PMKSY) திட்டத்தைச் செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒரு அங்கமான மெகா உணவு பூங்கா திட்டம் 31.03.2021 வரை செயல்படுத்தப்பட்டு வந்தது. மெகா உணவு பூங்காவை செயல்படுத்துதல், நிர்வகித்தல் ஆகியவை அதை செயல்படுத்தும் நிறுவனத்தின் பொறுப்பாகும்.
30.11.2025 நிலவரப்படி மெகா உணவு பூங்கா திட்டத்தின் கீழ் 41 மெகா உணவு பூங்கா திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு அவற்றில் பெரும்பாலானவை செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இதில் தமிழ்நாட்டில் தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரியத்துக்கு திருநெல்வேலியில் அனுமதிக்கப்பட்ட திட்டம் தற்போது செயலாக்க நிலையில் உள்ளது.
இந்தத் தகவலை உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு ரவ்னீத் சிங் இன்று (11.12.2025) மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2202294®=3&lang=1
(Release ID: 2202294)
****
AD/PLM/SH
(रिलीज़ आईडी: 2202578)
आगंतुक पटल : 17