நித்தி ஆயோக்
சுழற்சிப் பொருளாதாரத்தை மேம்படுத்த அடல் புதுமைக் கண்டுபிடிப்புகள் இயக்கத்துடன் இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் இணைந்துள்ளது
प्रविष्टि तिथि:
11 DEC 2025 9:37AM by PIB Chennai
இந்தியாவின் சுழற்சிப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நாடு தழுவிய புத்தொழில் விரைவுத் திட்டத்தைத் தொடங்க நித்தி ஆயோகின் அடல் புதுமைக் கண்டுபிடிப்புகள் இயக்கமும் இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனமும் இணைந்துள்ளன. இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் சுழற்சிப் பாரதம் என்ற திட்டத்தின் முன்முயற்சி மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் அதிக சாத்தியக்கூறு உள்ள 50 சுழற்சிப் பொருளாதார புத்தொழில் நிறுவனங்கள் கண்டறிந்து ஆதரவளிக்கப்படும். பிளாஸ்டிக் மறுசுழற்சி, மறுபயன்பாடு, மறுநிரப்புதல் மற்றும் அடுத்தத் தலைமுறை பேக்கேஜிங் உபகரணங்களுக்காக தீர்வுகளுடன் கூடிய பிளாஸ்டிக் சுழற்சியில், புதுமைக் கண்டுபிடிப்பு புத்தொழில் நிறுவனங்களுக்கு இத்திட்டம் முன்னுரிமை அளிக்கும்.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு அப்பால் ஜவுளி, மின்கழிவு போன்ற இதர நுகர்வோர் கழிவுகளில் பயன்பாட்டை மீட்டெடுக்கும் புத்தொழில் நிறுவனங்களுக்கும் இத்திட்டம் ஆதரவளிக்கும்.
இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் புத்தொழில் நிறுவனங்கள் வர்த்தகத் தலைவர்கள், கொள்கை நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து வழிகாட்டுதல்களைப் பெறும். தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்கள், சந்தை வாய்ப்புகளுடன் நிதி மானியத்தையும் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2202009®=3&lang=1
***
AD/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2202416)
आगंतुक पटल : 7