சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிஎம்ஜேவிகே திட்டத்தின் கீழ் சிறுபான்மையினர் அதிகம் உள்ள பகுதிகளில் சமூக உள்கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை

प्रविष्टि तिथि: 10 DEC 2025 2:34PM by PIB Chennai

"பிரதமரின் மக்கள் மேம்பாட்டுத் திட்டம் (பிரதம மந்திரி ஜன் விகாஸ் காரியக்ரம் - பிஎம்ஜேவிகே - PMJVK) என்பது மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய திட்டமாகும். சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சுகாதாரம், திறன் மேம்பாடு, கல்வி, மகளிர் மேம்பாடு, குடிநீர் வழங்கல், விளையாட்டு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுற்றுலா, கால்நடை பராமரிப்பு, பிற சமூக உள்கட்டமைப்பு போன்றவற்றை மேம்படுத்த இத்திட்டத்தில் கவனம் செலுத்தப்படுகிறது. மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்தின் முதன்மைத் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.

இது தேவையை அடிப்படையாகக் கொண்ட ஒரு திட்டமாகும். இதற்கு மாநில/யூனியன் பிரதேச வாரியாக குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலிருந்து பெறப்பட்ட வரைவுத் திட்டங்கள், அவற்றை செயல்படுத்துவதற்கான தயார்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் திட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

நித்தி ஆயோக் 2020–21-ம் ஆண்டில் நடத்திய மதிப்பீட்டு ஆய்வில், அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் வளர்ச்சி இடைவெளிகளைக் குறைப்பதில் பிஎம்ஜேவிகே திட்டம் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கீழ்கண்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன:

* கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், பள்ளி கட்டடங்கள்,  விடுதிகள் கட்டுதல்

சமூக சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள் அமைத்தல்

* ஐடிஐ-கள், பாலிடெக்னிக் கல்லூரிகள், திறன் பயிற்சி மையங்கள் ஏற்படுத்துதல்

* பெண்களை மையமாகக் கொண்ட வசதிகள்

இத்திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட திட்டப் பணிகளை செயல்படுத்துதல், பராமரித்தல் ஆகியவை மாநில/யூனியன் பிரதேச நிர்வாகத்தின் முழுப் பொறுப்பாகும்.

இந்தத் தகவலை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு இன்று (10.12.2025) மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201403&reg=3&lang=1

(Release ID: 2201403)

****

AD/PLM/SH

 


(रिलीज़ आईडी: 2201907) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी