தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

எஸ்ஐஆர் பணியின் போது கண்டறிய முடியாத, காலமான, போலி வாக்காளர்கள் குறித்த பட்டியலை வாக்குச்சாவடி அதிகாரிகள் வாக்குச்சாவடி முகவர்களிடம் அளிக்க வேண்டும்

प्रविष्टि तिथि: 10 DEC 2025 5:06PM by PIB Chennai

நாட்டில் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர கணக்கெடுப்பு பணிகளின் (எஸ்ஐஆர்) ஒரு பகுதியாக, வாக்குச்சாவடி அதிகாரிகள் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை சென்றும் கூட, தொடர்பு கொள்ள முடியாத வீடு மாறிய அல்லது காலமான, போலி வாக்காளர்கள் குறித்த பட்டியலை, தலைமைத் தேர்தல் அதிகாரிகள் அரசியல் கட்சிகளின் மாவட்ட தலைவர்களால் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி முகவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். இந்நடவடிக்கை பீகாரில் நடைபெற்ற  எஸ்ஐஆர் பணிகள் போல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

எஸ்ஐஆர் பணியில் ஈடுபட்ட சுமார் ஐந்து லட்சம் வாக்குச்சாவடி அதிகாரிகள், 12 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களிடம் வாக்குச்சாவடி நிலையிலான கூட்டத்தில் இப்பட்டியலை ஒப்படைக்க வேண்டும்.

இதன் மூலம் எந்தவொரு தவறையும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பாக சரிசெய்ய முடியும்.

தகுதிவாய்ந்த எந்தவொரு வாக்காளரும், விடுபடக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் உறுதிப்பாட்டின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201588&reg=3&lang=1  

***

SS/IR/RJ/SH


(रिलीज़ आईडी: 2201791) आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali