பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
தேசிய கிராம சுயராஜ்ய இயக்கம் மூலம் கிராம பஞ்சாயத்து உள்கட்டமைப்பு மேம்பாடு
प्रविष्टि तिथि:
09 DEC 2025 2:55PM by PIB Chennai
உள்ளாட்சி அமைப்பான பஞ்சாயத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பொறுப்பு மாநிலங்களுக்கே உரியது. ஆயினும், தேசிய கிராம சுயராஜ்ய இயக்கம் என்ற மத்திய நிதியுதவித் திட்டத்தின் கீழ், மத்திய அரசு உள்கட்டமைப்பு மற்றும் கணினி வழங்குவதில் மாநிலங்களின் முயற்சிகளுக்கு (உ.பி., பீகார் உட்பட) துணைபுரிகிறது.
இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 13,342 கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 55,587 கணினிகளைப் பெறவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து கிராம பஞ்சாயத்துகளும் பாரத்நெட் திட்டம் மூலம் இணையச் சேவையைப் பயன்படுத்தி, இ-கிராம்ஸ்வராஜ் வலைத்தளத்தை பயன்படுத்துகின்றன. இதுவரை 2.18 லட்சம் பஞ்சாயத்துகள் பாரத்நெட் திட்டத்தின்கீழ் சேவைக்குத் தயாராக உள்ளன.
தேசிய கிராம சுயராஜ்ய இயக்கம் மூலம் இ-பஞ்சாயத்து திட்டத்தை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இ-கிராம்ஸ்வராஜ், ஆன்லைன் தணிக்கை போன்ற பயன்பாடுகள் சேவை, நிதி மேலாண்மை மற்றும் வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்கின்றன.
மத்திய அமைச்சர் திரு.ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200804®=3&lang=1
***
AD/VK/SH
(रिलीज़ आईडी: 2201179)
आगंतुक पटल : 27