ஜவுளித்துறை அமைச்சகம்
தேசிய ஜவுளிக் கழகத்தின் உபரி சொத்துக்கள் விற்பனை: தமிழ்நாட்டு ஆலைகளின் நவீனமயமாக்கல் விவரங்கள்
प्रविष्टि तिथि:
09 DEC 2025 3:08PM by PIB Chennai
தொழில்துறை மற்றும் நிதியியல் மறுசீரமைப்பு வாரியத்தின் திட்டத்தின்படி, தேசிய ஜவுளிக் கழகம் தனது உபரி சொத்துக்களை விற்பனை செய்ததன் மூலம் ரூ.6,154.94 கோடி நிதியைத் திரட்டியுள்ளது. இதில் ரூ.1,543.38 கோடி ஆலைகளின் நவீனமயமாக்கலுக்கும், ரூ.2,384.78 கோடி ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வுத் திட்டத்திற்கும், மீதமுள்ள தொகை இதர நிலுவைத் தொகைகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 23 ஆலைகளின் நவீனமயமாக்கலுக்கு இந்த நிதி செலவிடப்பட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், கொரோனா காலதிர்க்கு பிறகு ஆலைகளின் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 7 ஆலைகளின் மேம்பாட்டிற்காகக் குறிப்பிடத்தக்க நிதி செலவிடப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக, கமுதியில் உள்ள பயனியர் ஸ்பின்னர்ஸ் ஆலைக்கு ரூ.78.67 கோடியும், காளையார் கோவிலில் உள்ள காளீஸ்வரர் ஆலை 'பி' பிரிவிற்கு ரூ.71.64 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.
மேலும், கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கவிலாஸ் ஆலைக்கு ரூ.56.77 கோடி, பங்கஜா ஆலைக்கு ரூ.22.59 கோடி, முருகன் ஆலைக்கு ரூ.16.88 கோடி, கம்போடியா ஆலைக்கு ரூ.14.06 கோடி மற்றும் கோயம்புத்தூர் எஸ் & டபுள்யூ ஆலைக்கு ரூ.0.96 கோடி என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகவலை மக்களவையில் இன்று மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200818®=3&lang=1
***
SS/SE/SH
(रिलीज़ आईडी: 2201136)
आगंतुक पटल : 13