மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
ஐஐடி மெட்ராஸ் மற்றும் இந்தியா செயற்கை நுண்ணறிவு இயக்கம், 2026-ல் சர்வதேச செயற்கை நுண்ணறிவு மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்துள்ளன
प्रविष्टि तिथि:
09 DEC 2025 2:44PM by PIB Chennai
பாதுகாப்பான, நம்பகமான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து ஐஐடி மெட்ராஸ் மற்றும் இந்தியா செயற்கை நுண்ணறிவு இயக்கம் இணைந்து சர்வதேச மாநாட்டை 2026-ல் சென்னையில் நடத்த ஏற்பாடு செய்துள்ளன
இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஏற்படும் தாக்கம் குறித்த உச்சி மாநாட்டிற்கு முன்னதாக,பாதுகாப்பான, நம்பகமான மற்றும் உள்ளடக்கிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான இந்தியாவின் தொலைநோக்கு பார்வையை முன்னோக்கி கொண்டு செல்லும் வகையில், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ், உள்ள இந்தியா செயற்கை நுண்ணறிவு இயக்கத்துடன் இணைந்து, ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் உள்ள செயற்கை நுண்ணறிவு மையம், அது தொடர்பான சர்வதேச மாநாட்டை டிசம்பர் 11 அன்று சென்னையில் நடத்தவுள்ளது. இந்த மாநாடு டிசம்பர் 10 - ம் தேதி மாலையில் தொடக்க விழாவுடன் முறைப்படி தொடங்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 11 - ம் தேதி நடைபெறும் இம்மாநாட்டில், முக்கியத்துவம் வாய்ந்த பணிக்குழு கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல் முறையாக, உலகளாவில் தென் பகுதிகளில் உள்ள வளரும் நாடுகளில் நடத்தப்படும் இந்தியா–செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தாக்கம் குறித்த உச்சி மாநாடு 2026 பிப்ரவரி 15–20 - ம் தேதி வரை புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200799®=3&lang=1
***
SS/SV/SH
(रिलीज़ आईडी: 2201066)
आगंतुक पटल : 10