பாதுகாப்பு அமைச்சகம்
கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி பிரேசில் பயணம்
प्रविष्टि तिथि:
09 DEC 2025 3:20PM by PIB Chennai
இந்திய கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி 2025 டிசம்பர் 9 முதல் 12-ம் தேதி வரை பிரேசிலில் பயணம் மேற்கொள்கிறார். இந்திய கடற்படை, பிரேசில் கடற்படை இடையே கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தப் பயணம் அமைந்துள்ளது.
தமது பயணத்தின் போது, பிரேசில் பாதுகாப்பு அமைச்சர் திரு ஜோஸ் மியூசியோ, பிரேசில் ஆயுதப்படை கூட்டு தலைமைத் தளபதி அட்மிரல் ரெனாட்டோ ரோட்ரிகஸ் டி அக்வயர் ஃப்ரெய்ர், பிரேசில் கடற்படை கமாண்டர் அட்மிரல் மார்கோஸ் சாம்பயோ ஓல்சன் ஆகியோருடன் விவாதிக்க உள்ளார். இருதரப்பு கடல்சார் ஒத்துழைப்பு, இருநாட்டு கடற்படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்புக்கான புதிய வழிவகைகளை கண்டறிதல் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200829®=3&lang=1
***
SS/IR/RJ/SH
(रिलीज़ आईडी: 2201009)
आगंतुक पटल : 16