எஃகுத்துறை அமைச்சகம்
மாதாந்திர எஃகு உற்பத்தி மற்றும் விற்பனையில், கடந்த நவம்பர் மாதத்தில், முன்னெப்போதும் இல்லாத அளவில் உச்சத்தை எட்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
09 DEC 2025 11:04AM by PIB Chennai
இந்தியாவின் ஒருங்கிணைந்த எஃகு உற்பத்தி ஆலையான தேசிய கனிமவள மேம்பாட்டு நிறுவனம் (என்எம்டிசி) கடந்த நவம்பர் மாதத்தில் அதன் உற்பத்தி நடவடிக்கைகளில் சாதனை படைத்துள்ளது. நிலைத்தன்மையுடன் கூடிய வலுவான நடைமுறைகள், சிறப்பான செயல்பாடுகள் மற்றும் அதிகரித்து வரும் உற்பத்தித் திறனை முழு அளவில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், இந்த நிறுவனம் உற்பத்தியின் பல்வேறு முக்கிய பகுதிகளில் அதன் சிறந்த மாதாந்திர செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது.
நவம்பர் மாதத்தில், உற்பத்திக்கான மூலப்பொருள் கையாளுதல் அமைப்பு மூலம் சாதனைகளைப் பதிவுசெய்துள்ளது. அதாவது, மூலப்பொருட்களின் கொள்முதல் நடவடிக்கைகள் நவம்பர் 21, 2025 அன்று 616 வேகன்களாக உயர்ந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த உற்பத்தி ஆலை முன்னெப்போது இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக மாதாந்திர அடிப்படை கலவை உற்பத்தியான 5,18,886 டன்களை எட்டியுள்ளது.
சின்டரில் உள்ள ஆலையில், என்எஸ்எல் நிறுவனம், அதன் அன்றாட மற்றும் மாதாந்திர உற்பத்தி சாதனைகளுடன் வளர்ச்சியை நோக்கி முன்னேற்றம் அடைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, நவம்பர் 30, 2025 அன்று ஒரே நாளில் 15,590 டன் அளவிலும், அந்த மாதத்தில் 4,14,271 டன் அளவிலும் உற்பத்தியின் உச்சத்தை எட்டியது. உற்பத்திக்கான மதிப்பிடப்பட்ட திறன் பயன்பாட்டில் 105% - க்கும் கூடுதல் உற்பத்தித் திறனுடன் அந்த ஆலை இயங்கியது..
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200709®=3&lang=1
***
SS/SV/RK
(रिलीज़ आईडी: 2200745)
आगंतुक पटल : 13