புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம்

प्रविष्टि तिथि: 08 DEC 2025 4:58PM by PIB Chennai

மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம், இந்தியாவை பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, பயன்பாடு மற்றும் ஏற்றுமதிக்கு உலகளாவிய மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த இலக்கை அடைய, அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட ஒரு 'ஒருமித்த அணுகுமுறை'  பின்பற்றப்படுகிறது. இதன் கீழ், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்  ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பைக் கவனிப்பதுடன், மின்சாரம், பெட்ரோலியம், போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து போன்ற பல்வேறு அமைச்சகங்கள் அவற்றின் துறைகளில் பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்துவதற்கும், அதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் திட்டங்களைச் செயல்படுத்துகின்றன.

உதாரணமாக, போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறைகளில் பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்துவதற்கான சோதனைத் திட்டங்களுக்கு வழிகாட்டுதல்களை இந்த  அமைச்சகம் வெளியிட்டுள்ளது

இந்தத் தகவலை மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணை அமைச்சர் திரு. ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக் மாநிலங்களவையில் எழுத்து மூலம் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200444&reg=3&lang=1

செய்தி வெளியீட்டு அடையாள எண் : 2200444)

***

AD/VK/SH


(रिलीज़ आईडी: 2200655) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी