சுற்றுலா அமைச்சகம்
சவால் அடிப்படையிலான சுற்றுலா இலக்கு மேம்பாடு குறித்த தகவல்
प्रविष्टि तिथि:
08 DEC 2025 2:39PM by PIB Chennai
சுற்றுலா தலங்கள் மேம்பாடு முதன்மையாக அந்தந்த மாநில அரசு / யூனியன் பிரதேச நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும், சுற்றுலா அமைச்சகம் அதன் மத்திய துறை திட்டங்களான ‘ஸ்வதேஷ் தர்ஷன்’, ‘ஸ்வதேஷ் தர்ஷன் 2.0 ’, ‘சவால் அடிப்படையிலான இலக்கு மேம்பாடு’ உள்ளிட்ட திட்டங்களின் மூலம் சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாட்டின் முயற்சிகளை நிறைவு செய்கிறது.
கூடுதலாக, மத்திய அரசு, 'மாநிலங்களுக்கு மூலதன முதலீட்டுக்கான சிறப்பு உதவி' என்ற முன்முயற்சியின் கீழ், சுற்றுலாத் திட்டங்களின் மேம்பாட்டிற்காக மாநிலங்களுக்கு நிதி உதவியையும் வழங்கியுள்ளது.
ஸ்வதேஷ் தர்ஷன் 2.0-ன் துணைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சவால் அடிப்படையிலான இலக்கு மேம்பாட்டின் கீழ், அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்புகளுக்கு பதிலளிக்கும் விதமாக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் / யூனியன் பிரதேச நிர்வாகங்களால் திட்டங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன.
இந்தத் திட்டத்தின் கீழ், மத்திய அமைச்சகங்கள்/துறைகள் அல்லது சம்பந்தப்பட்ட மாநில அரசு/யூனியன் பிரதேசம் ஆகியவற்றின் பொருத்தமான முன்முயற்சிகளுடன் குடிமை உள்கட்டமைப்பு, உள்ளூர் இயக்கம், திறன் மேம்பாடு, உருவாக்கப்படும் அனுபவம் ஆகியவற்றில் ஒருங்கிணைப்பை ஏற்றுக்கொள்ள அமைச்சகம் மாநில அரசுகளை ஊக்குவிக்கிறது.
இந்தத் தகவலை மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200321®=3&lang=1
***
SS/PVK/SH
(रिलीज़ आईडी: 2200544)
आगंतुक पटल : 6