பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

லடாக்கிலிருந்து 125 எல்லை உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அரசின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு இந்த திட்டங்கள் சான்றாகும்: திரு ராஜ்நாத் சிங்

प्रविष्टि तिथि: 07 DEC 2025 2:48PM by PIB Chennai

பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று (டிசம்பர் 07, 2025), எல்லைச் சாலைகள் அமைப்பான பிஆர்ஓ-வின் முக்கியத்துவம் வாய்ந்த 125 உள்கட்டமைப்புத் திட்டங்களை லடாக்கில் இருந்து ஒரே நேரத்தில் தொடங்கி வைத்தார்லடாக், ஜம்மு - காஷ்மீர் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களிலும், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், ராஜஸ்தான், மேற்கு வங்கம், மிசோரம் ஆகிய 07 மாநிலங்களிலும் இந்தத் திட்டங்கள் அமைந்துள்ளன. 28 சாலைகள், 93 பாலங்கள், 4 இதர கட்டமைப்புகள் என 125 கட்டமைப்புகள் இன்று பயன்பாட்டுக்குத் தொடங்கி வைக்கப்பட்டன. இவை அனைத்தும் சுமார் 5,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜநாத் சிங், வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப எல்லைப் பகுதிகளின் உள்கட்டமைப்பை தொடர்ந்து வலுப்படுத்துவதில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டிற்கு இந்த திட்டங்கள் ஒரு சான்றாக உள்ளன என்று கூறினார். இந்த போக்குவரத்து இணைப்புத் திட்டங்கள், பொருளாதாரம், மேலாண்மை என அனைத்துக்கும் முக்கியமானவை என்று அவர் கூறினார். ராணுவத்தினரின் போக்குவரத்து, சீரான சரக்குப் போக்குவரத்து, சுற்றுலா, வேலைவாய்ப்பு, வளர்ச்சி ஆகியவற்றை இது மேம்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

எல்லைப் பகுதிகளில் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டதால் தான் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை வரலாற்று வெற்றியாக மாறியது என்று அவர் குறிப்பிட்டார். பேரிடர் காலங்களின் போது எல்லை சாலைகள் அமைப்பு, மீட்பு நிவாரணப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக திரு ராஜ்நாத் சிங் பாராட்டுத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய எல்லைச் சாலைகள் அமைப்பின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் ரகு ஸ்ரீனிவாசன், முற்போக்கான கொள்கைகளுக்கும் மேம்பட்ட ஆதரவுக்கும் அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

ராஜஸ்தான் ஆளுநர் திரு ஹரிபாவ் கிசன்ராவ் பாக்டே, மிசோரம் ஆளுநர் ஜெனரல் விஜய் குமார் சிங், லடாக் துணை நிலை ஆளுநர் திரு கவிந்தர் குப்தா, ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திரு உமர் அப்துல்லா, மிசோரம் முதலமைச்சர் திரு லால்துஹோமா, மத்திய அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜு, மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2199999&reg=3&lang=1

***

SS/PLM/RJ


(रिलीज़ आईडी: 2200079) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi