புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வானிலை முன்னறிவிப்பு முன்னேற்றங்கள்

प्रविष्टि तिथि: 04 DEC 2025 5:04PM by PIB Chennai

சமீபத்திய கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களின் அடிப்படையில் வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை சேவைகளின் தரவு சேகரிப்பு மற்றும் பரப்புதலை மேம்படுத்துவதற்காக இந்திய வானிலை ஆய்வு மையம் சமீபத்திய ஆண்டுகளில் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. வலைத்தளம், மின்னஞ்சல், குறுஞ்செய்தி மற்றும் யூடியூப், முகநூல், எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்கள் மூலம் முன்னறிவிப்புகளும் எச்சரிக்கைளும்  விடுக்கப்படுகின்றன. 

இந்திய வானிலை ஆய்வு மையம் சமீபத்திய ஒரு பயன்பாட்டு நிரலாக்க இடைமுகத்தை (API) உருவாக்கியுள்ளது, இது பல்வேறு தனியார் மற்றும் பொது நிறுவனங்களால் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளை பல்வேறு ஊடகங்கள் மூலம் பொது மக்களுக்கு பரப்புவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் பல்வேறு பங்குதாரர்களால் உருவாக்கப்பட்ட செல்பேசி செயலிகளும் அடங்கும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2198795&reg=3&lang=1

(Release ID: 2198795)

****

AD/BR/SH


(रिलीज़ आईडी: 2199182) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu