புவி அறிவியல் அமைச்சகம்
கனிமங்கள், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவிற்கான ஆழ்கடல் ஆய்வு
प्रविष्टि तिथि:
04 DEC 2025 5:07PM by PIB Chennai
ஆழ்கடல் இயக்கத்தின் கீழ், சர்வதேச கடல்படுகை ஆணையத்துடன் (ISA) கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஆழ்கடல் கனிம ஆய்வு செய்யப்படுகிறது. தற்போது, இந்திய அரசு, சர்வதேச கடல்படுகை ஆணையத்துடன் மூன்று ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளது.
ஐஎஸ்ஏ-வால் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின்படி ஆய்வு நடவடிக்கைகள் நடத்தப்படுகின்றன. கனிம ஆய்வு தளங்களில் கடல்படுகை வள மதிப்பீடு மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள் ஐஎஸ்ஏ உடனான ஒப்பந்தத்தின் ஒருங்கிணைந்த அங்கமாகும். இதற்காக, இந்தியப் பெருங்கடலின் ஒதுக்கப்பட்ட ஒப்பந்தப் பகுதியிலிருந்து புவியியல், புவி இயற்பியல், கடல்சார் மற்றும் உயிரியல் தரவு சேகரிக்கப்படுகின்றன. ஆழ்கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளை நன்கு புரிந்துகொள்ள பல்லுயிர் மதிப்பீடுகள் உள்பட விரிவான சுற்றுச்சூழல் அடிப்படை ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2198797®=3&lang=1
(Release ID: 2198797)
****
AD/BR/SH
(रिलीज़ आईडी: 2199175)
आगंतुक पटल : 3